அறிமுகமே ஆகல..விலையை கசியவிட்ட அமேசான்.! ஐக்யூ-வின் புதிய மாடல்.?

Published by
செந்தில்குமார்

சீன ஸ்மார்ட்போன் தாயாரிப்பாளாரான ஐக்யூ (iQOO), இந்தியாவில் அதன் புதிய ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை டிசம்பர் 12ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே ஐக்யூ 12 நவம்பர் 7ம் தேதி சீனாவில், ஐக்யூ 12 ப்ரோவுடன் இணைந்து வெளியிடப்பட்டது. ஆனால், இந்தியாவில் ஐக்யூ 12 உடன் இணைந்து ப்ரோ மாடல் அறிமுகமாகுமா என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.

ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான அமேசான் மூலம் விற்பனையாகும் என்று ஐக்யூ ஏற்கனேவே தெரிவித்திருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ப்ரீ-புக் செய்ய வெளியாகியுள்ளது. இதனுடன் சேர்த்து தவறுதலாக ஸ்மார்ட்போனின் விலையையும் வெளிப்படுத்தியுள்ளது. இப்போது அதன் விலை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களை காணலாம்.

விலை

இந்த ஸ்மார்ட்போனுக்கான ப்ரீ-புக் பாஸ் கூப்பனை ரூ.999-க்கு டிசம்பர் 5 முதல் டிசம்பர் 7 வரை வாங்கி கொள்ளலாம். அமேசான் போனின் விலையை இப்போது மறைத்திருந்தாலும், டிப்ஸ்டர்கள் பலரும் விலை வெளியான ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளனர்.

மிரட்டல் அறிமுகம்..24ஜிபி ரேம்..5,400mAh பேட்டரி.! ஒன்பிளஸ்-இன் புதிய மாடல்.?

அதைவைத்துப் பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் உள்ளது. இதில் 12 ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.52,999 ஆகவும், 16 ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.57,999 ஆகவும் உள்ளது.

முன்னதாக டிப்ஸ்டர்களில் ஒருவரான முகுல் ஷர்மா, இந்தியாவில் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் விலையை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்ப்ளே

ஐக்யூ 12 ஸ்மார்ட்போனில் 1.5K (2800 × 1260 பிக்சல்) ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் (17.22 செ.மீ) பிஓஇ ஓஎல்இடி (BOE OLED) அமோலெட் கர்வுடு டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இதில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபி64 ரேட்டிங் உள்ளது.

பிராசஸர்

அட்ரினோ 750 (Adreno 750) கிராஃபிக்ஸ் கார்டுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் ஐக்யூ 12 போனில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும் முதல் போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஐக்யூ நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

இது 4 நானோமீட்டர் செயல்முறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த சிப்செட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்பைவிட சிபியு செயல்திறனில் 30% மற்றும் ஜிபியு செயல்திறனில் 20% அதிகரிப்பைக் கொண்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 14 உள்ளது.

கேமிங்கிற்காக பிரத்யேக சூப்பர் கம்ப்யூட்டிங் Q1 சிப் உள்ளது. இதனால் 144 எப்பிஎஸில் சூப்பர் ரெசல்யூஷன் உடன் கேம் விளையாட முடியும்.

இந்த வாரம் அறிமுகமாகிறதா நத்திங் ஃபோன் 2ஏ.? வெளியான மறைமுக அப்டேட்!

கேமரா

கேமராவைப் பொறுத்தவரையில் எல்இடி ஃபிளாஷுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 எம்பி ஆஸ்ட்ரோகிராஃபி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா – வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா அடங்கும். முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

பேட்டரி

இதில் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி ஆனது பொருத்தப்பட்டுள்ளது. அதோடு டைப்-சி சார்ஜிங் போர்ட், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், வைஃபை 7, என்எஃப்சி, புளூடூத் 5.4, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பிற அம்சங்களும் உள்ளன. 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

1 hour ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

2 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

5 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

5 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

6 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

6 hours ago