கொண்டை கட்டளையின் அற்புதமான பயன்கள்…!!!
கொண்டை கடலை என்பது தானிய வகையை சேர்ந்தது. இந்த கடலை நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தருகிறது. இந்த கடலையை நாம் இடையில் சாப்பிடும் உணவாக கூட உண்ணலாம் அல்லது குழம்பு வைத்து கூட சாப்பிடலாம். இந்த கடலையை பல வகையாக சமையல் செய்து பயன்படுத்தலாம்.
சத்துக்கள் :
கொண்டை கடலையில் இரும்பு சத்து, புரதம், சுண்ணாம்பு, வைட்டமின்கள், கனிம சத்துக்கள், நார்சத்து, தாது சத்துக்கள், ஊட்ட சத்துக்கள் என பல சத்துக்கள் உள்ளது.இதில் கொழுப்பின் அளவு குறைவாக தான் காணப்படும்.
பயன்கள் :
உடல் எடை அதிகரிக்க :
உடல் எடை அதிகரிக்க வேண்டும் என ஆசைபடுபவர்கள் இந்த கடலையை அனுதினமும் சாப்பிட்டு வந்தால், உடல் மெலிந்து காணப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த சத்துள்ள உணவாக அமைகிறது.
சளி, இருமல் :
இந்த கொண்டை கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் காணப்படும் சளி, இருமல் போன்ற நோய்களை நீக்கி பூரண சுகத்தை தருகிறது.
வயிற்று பிரச்சனை :
கொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருவேளை உண்டு வந்தால் வயிற்றில் காணப்படும் பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.
உடல் வலிமை :
கடலையை இரவில் ஊற வைத்து காலையில் எடுத்து சாப்பிட்டால், உடல் எலும்புகள் மற்றும் நரம்புகள் பலம் பெறும். மேலும் கொண்டை கடலையை அவித்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் பலம் அடையும்.