இயக்குநர் விஜய்க்கும் நடிகை அமலா பாலுக்கும் திருமணம் நடைபெற்று பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கான காரணம் குறித்து பேட்டியளித்த இயக்குநர் விஜய்யின் தந்தைக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை அமலாபால் கூறியுள்ளார்.
இயக்குநர் விஜயும்- நடிகை அமலா பாலும் காதலித்து வந்த நிலையில் 2014 ஆண்டு ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடைபெற்றது.திருமணம் வாழ்க்கை 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு 2017 பிப்ரவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் இயக்குநர் விஜய் ஐஸ்வர்யா என்ற பெண்ணை ஜூலை 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இந்த விவாகரத்துக்கான காரணம் குறித்து இயக்குநர் விஜய்யின் தந்தை பேட்டியளித்து இருந்தார் அதில் திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று அமலாபால் முடிவு எடுத்தாகவும். ஆனால் நடிகர் தனுஷ் தான் அம்மா கணக்கு படத்தில் அமலாபாலை நடிக்க வைத்தார். இதுதான் அமலாபால் மற்றும் ஏ.எல் விஜயின் விவாகரத்துக்கு முக்கியமான காரணம் என்று கூறினார்.
இது குறித்து பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்த நிலையில் ஆந்திர பிரபா என்ற இணைய ஊடகத்துக்கு நடிகை அமலாபால் கலந்து கொண்டர் இந்த விவாகரம் தொடர்பாக அவரிடம் பேட்டியில் கேட்கப்பட்ட அதற்கு அமலாபால் கூறியிருப்பதாவது, என் விவாகரத்து எப்போதோ நடந்து முடிந்த ஒரு சம்பவம். அதைப் பற்றி இப்ப கேட்கிறீர்கள். இந்த சர்ச்சை தற்போது தேவையில்லாதது.விவாகரத்துக்கான முடிவு என்னுடைய சொந்த முடிவு. அதற்காக வேறு யாரும் பொறுப்போ அல்லது காரணமோ இல்லை. வேறு ஒருவரைக் காரணமாக வைத்து யாராவது விவாகரத்து செய்வார்களா? என்றும் நடிகர் தனுஷ் என்னுடைய நலம் விரும்பி. இது குறித்து தன்னிடம் வேறு எதையும் கேட்க வேண்டாம். அதைப்பற்றி தானும் பேச விரும்பவில்லை” என்று கூறினார்.மேலும் தற்போது ஒருவருடன் காதலில் இருப்பதாக கூறினீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அமலா கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு, எப்படி காதலை சொன்னது போல் முறையாக திருமணத்தையும் அறிவிப்பேன்.இன்னும் காலமிருக்கிறது” என்று கூறினார்.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…