நடுக்கடலில் ஊஞ்சல் ஆடும் அமலா பால்..!
நடிகை அமலாபால் “ஆடை” திரைப்படத்தைத் தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். “கடவர்” என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரத்தையும் அமலாபால் எடுத்துள்ளார்.
தற்போது மார்க்கெட்டை இழந்து வரும் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.இந்நிலையில் சில நாள்களுக்கு முன் இந்தோனேஷியா அமலா பால் சென்று உள்ளார்.
அங்கு அவர் நடுக்கடலில் ஊஞ்சல் ஆடியுள்ளார். மேலும் ஒரு வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை கன்னத்திலும் , வாயிலும் தடவிக் கொண்டு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.