அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ருடே(Justin Trudeau) சந்திப்பின் போது தவறான புள்ளி விபரங்கள் தெரிவித்ததை ஒப்புக் கொண்டார்!
அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ருடே(Justin Trudeau) உடனான சந்திப்பின் போது தவறான புள்ளி விபரங்களை பேசியதாக ஒப்புக் கொண்டுள்ளார். இரு தலைவர்களுடனான சந்திப்பு குறித்து மிசவுரியில் நடைபெற்ற கூட்டத்தில் டிரம்ப் பேசியதாக ஆடியோ குறிப்பு ஒன்றை அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், கனடாவுடன் வர்த்தகப் பற்றாக்குறை இருப்பதாக டிரம்ப் கூறியதாகவும், ஆனால் இதனை ஜஸ்டின் ட்ருடே(Justin Trudeau) உடனடியாக மறுத்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். சரியான புள்ளி விபரங்கள் தனக்கு தெரியாத போதிலும், Justin கூறியது தவறு என தான் வலியுறுத்தியதாக டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.