தீமைகள் பல இருந்தாலும் காபியில் நன்மைகளும் உள்ளது, அறியலாம் வாருங்கள்!

Default Image

நாம் தினமும் காலையில் எழுந்ததும் கண் விழிக்கும் போதே கண்முன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது காபிதான். அதிகம் அருந்துவதால் தீமையை தந்தாலும், இந்த காபியில் சில மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

காபியில் உள்ள நன்மைகள்

காபியில் காஃபைன் எனும் வேதிப்பொருள், பொட்டாசியம் ,அண்டிஆக்சிடன்ட்ஸ் மெக்னீசியம் மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளது. காஃபைன் எனும் வேதிப்பொருள் ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுவதுடன் மூளையை பாதுகாப்பாக வைத்திருக்கவும் பயன்படுகிறது. இதயம் வேகமாக துடிக்க வைத்து உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதுடன், சுவாச குழாய பிரச்சினை உள்ளவர்களுக்கும் விரைவில் சுகமளிக்கிறது. வளர்சிதை மாற்றத்தையும் குடல் அசைவு செயல்பாட்டையும் அதிகரிக்க செய்வதால் இந்த காபி மூலமாக மலச்சிக்கல் நீங்குகிறது. மேலும் மன அழுத்தத்தை போக்கும், நரம்புத்தளர்ச்சி, கல்லீரல் நோய் இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றை நீக்குவதற்கும் பயனுள்ளதாக காப்பி அமைகிறது.

காபியில் உள்ள தீமைகள்

ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க கூடிய காஃபைன் எனும் வேதிப்பொருள் காபியில் அதிக அளவில் இருப்பதால் அளவுக்கு மீறும் பொழுது அது நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. காபிக்கு அடிமையாக சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனால் உடல் எடை அதிகரிப்பதுடன், மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு கப் காபியில் 80 முதல் 120 மில்லி கிராம் அளவு காஃபைன் உள்ளது. எனவே சாப்பாட்டுக்கு பின்பதாக காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் காபியில் அதிக அளவு சர்க்கரை சேர்த்து குடிப்பதை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்பாக காபி குடித்துவிட்டு உடனடியாக தூங்கக்கூடாது. மேலும், தலைவலி மாத்திரையை காபியோடு சாப்பிடுபவர்கள் நிச்சயம் இனி அதை தவிர்த்து விடுங்கள் ஏனென்றால் அந்த மாத்திரையின் பாவரை காபி இல்லாமல் ஆக்கிவிடும். குறிப்பாக கர்ப்பிணிகள், அல்சர் உள்ளவர்கள் செரிமான பிரச்சனை உள்ளவர்களும் இந்த காபியை தவிர்ப்பது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்