“அஞ்சலி அஞ்சலி” பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அல்லு அர்ஜுன் மகள் .!அழகிய வீடியோ உள்ளே.!

Default Image

“அஞ்சலி அஞ்சலி” பாடலுக்கு பேபி ஷாமிலியாக அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா நடனமாடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

கடந்த 1990-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரேவதி,ரகுவரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அஞ்சலி.இதில் அஞ்சலியாக நடித்த பேபி ஷாமிலி அவரது நடிப்பால் பலரையும் கவர்ந்து படம் சூப்பர் ஹிட் அடித்தது . சுருண்ட முடியுடன் கியூட்டான எக்ஸ்பிரஷனை கொடுத்து அஞ்சலி அஞ்சலி பாடலுக்கு நடனமாடி இருப்பார்.

இந்த நிலையில் அஞ்சலி படத்தில் பேபி ஷாமிலியை போன்று அச்சு அசலாக இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா அஞ்சலி அஞ்சலி பாடலின் தெலுங்கு வெர்ஷனுக்கு கியூட்டான எக்ஸ்பிரஷனை கொடுத்து அசத்தியுள்ளார்.மகளது 4-வது பிறந்தநாளை முன்னிட்டு அல்லு அர்ஜுன் மகளின் இந்த அழகான வீடியோவை தனது யூடுயூப் சேனலில் வெளியிட்டுள்ளார் .வெள்ளை நிற உடையில் குட்டி ஏஞ்சலாக அசத்தியுள்ள இந்த பாடலின் இறுதியில் இயக்குநர் மணிரத்னம் மற்றும் பாடலாசிரியர் ராஜஸ்ரீ ஆகிய பலருக்கு அல்லு அர்ஜுன் நன்றியை தெரிவித்துள்ளார் .அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹாவின் இந்த அழகான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் ரசித்தும் வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்