அனைத்து கட்சி கூட்ட தீர்மானங்கள் : முக.ஸ்டாலின் பேட்டி
தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் 27-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், 29-ந் தேதி மறியல் போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில், பஸ் கட்டண உயர்வை குறைக்க அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் காங்கிரஸ் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இதில் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், மதிமு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அபுபக்கர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘அனைத்துக்கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் வருகிற 13-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் . சிறையில் உள்ள மாணவர்கள், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராடி கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்’ இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு சினசுவடுடன் இணைந்திருங்கள்