Ujjwala Yojana: இலவச சிலிண்டர்! உஜ்வாலா திட்டத்திற்கு ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு.!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், கூடுதலாக 75 லட்சம் (அதாவது) ஆண்டொன்றுக்கு 25 லட்சம் இலவச சிலிண்டர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்க, ரூ.1,650 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களின் பெண்களுக்கு இலவச சிலிண்டர்கள் இணைப்புகளை வழங்குவதற்காக இந்த திட்டம் மே 2016 இல் பிரதமரால் தொடங்கப்பட்டது.
தற்பொழுது, உஜ்வாலா திட்டத்தில் மானிய முறையில் சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும். இதற்காக, ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, தகுதியுள்ளவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேட்டியளித்துள்ளார்.