அனைத்து பெண்கள் பல்.கழகத்திற்குள் மொபைல்போன்களுக்கு தடை;மீறினால் ரூ.5,000 அபராதம்!
பாகிஸ்தானில் உள்ள அனைத்து பெண்கள் பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள அனைத்து பெண்கள் பல்கலைக்கழகம் தங்களது வளாகத்தில் மாணவிகள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
மேலும்,பல்கலைக்கழக வகுப்பு நேரங்களின் போது மாணவர்கள் அதிக நேரம் சமூக ஊடக பயன்பாடுகளைப் பயன்படுத்துகின்றனர்.இது அவர்களின் கல்வி, நடத்தை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை பாதிக்கிறது.எனவே, பல்கலைக்கழக நேரங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறும் பட்சத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் பல்கலைக் கழகத்தின் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும்,பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் பெண் மாணவிகளுக்கு ஆடை அணிதல் மற்றும் முடி அலங்காரங்கள் உட்பட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அனைத்து பெண்கள் பல்கலைக்கழகம் ஸ்வாபி கைபர் பக்துன்க்வாவில் அமைந்துள்ளது.இப்பகுதிகளில் தலிபான்கள் அவ்வப்போது தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.அச்சமயத்தில் பெண்கள் பள்ளிகளையும் தலிபான்கள் குறிவைக்கின்றனர்.
இந்நிலையில்,நேற்று (ஏப்ரல் 20, 2022 (புதன்கிழமை)) முதல் அனைத்து பெண்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஸ்மார்ட்ஃபோன்கள் அல்லது டேப்லெட்டுகள் அனுமதிக்கப்படாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.