அடடா.. முதல் இரவில் இவ்ளோ விஷயங்கள் இருக்கப்பா..!!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திருமணம் என்பது உலகம் முழுவதும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இனிமையான நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அதில் குறிப்பிடும் சில பழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளும் நம்மை ஆச்சரியமடையை செய்கிறது.பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பாரம்பரிய அணுகுமுறை என்பது இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.
திருமணம் ஆன புதிய தம்பதிகளான மணமகன் மற்றும் மணமகளும் ஒன்றாகக் கழிக்கும் முதல் இரவில் கூட நிறய பாரம்பரிய மூடநம்பிக்கைகள் உள்ளது. ஆச்சிரியமான சில முதல் இரவு பழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் உள்ளது.
திருமணத்தைக் பொறுத்தவரையில் முதல் இரவிற்கு பல மடங்கு மூட நம்பிக்கைகள் உள்ளது. இந்த மூடநம்பிக்கைகள் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு விதமான மூடநம்பிக்கைகள் உள்ளது. அதில் மேற்குநாடுகளில் முதல் இரவு அன்று தலையணைக்கு அடியில் லிம்பர்க் சீஸ் வைத்தால் அதிக குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும் என்று நம்புகிறார்கள்.
மேலும் முதல் இரவு அன்று முதலில் தூங்குபவர்கள் முதலில் இறந்து விடுவார்கள் என்று ஒரு மூடநம்பிக்கை பரவலாக உள்ளது. அடுத்ததாக மலர் அலங்காரம் முதல் இரவு அன்று அறையை சுற்றி வாசனையான மலர்கள் கொண்டு அலங்கரிப்பது போன்ற விஷயங்கள் பல காலமாக இருக்கும் பழக்கமாகும். ஏனெனில் இவை ஒரு கவர்ச்சியான நறுமணத்தைக் கொடுக்கிறது மேலும் அவை தம்பதியினருக்கு ஒரு பாலுணர்வை ஏற்படுத்தும் என்று நம்பபட்டு கடைபிடிக்கப்படுகிறது.
புதுசாக திருமணமான தம்பதிகளுக்கு பாரம்பரியமாக ஒரு கிளாஸ் பால் கொடுக்கப்படுகிறது. பாலில் நொறுக்கப்பட்ட பாதாம் மற்றும் மிளகு கலக்கப்படுகிறது. இது தம்பதிகளின் பாலுணர்வை அதிகரிக்குமாம்.
திருமணமான தம்பதினர் வெள்ளை பெட்சீட்டில் உறங்குவது வழக்கம்.பெண்களின் கன்னித்தன்மைக்கு இந்து மதத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. முதல் இரவு படுக்கையில் வெள்ளை விரிப்புகளில் தூங்குவதினால் அதில் ஏற்படும் கரை மணப்பெண்ணின் கன்னித்தன்மைக்கு சான்றாக கூறப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!
February 6, 2025![TVK Leader Vijay - TN CM MK Stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TVK-Leader-Vijay-TN-CM-MK-Stalin.webp)
ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!
February 6, 2025![rohit sharma hardik pandya](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-hardik-pandya.webp)
விராட் கோலிக்கு என்னாச்சி? ‘ஷாக்’கான ரசிகர்கள்!
February 6, 2025![Virat Kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli.webp)