இந்திய அணிக்கு வந்த சோதனை!பும்ரா வீசிய பந்தில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் காயம்
வரும் சனிக்கிழமை இந்திய அணி ,ஆப்கானிஸ்தான் அணியுடன் ஐந்தாவது போட்டியில் மோத உள்ளது. இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பும்ரா வீசிய பந்தில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் காலில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே இந்திய அணி இரண்டாவது போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி உடன் மோதியது. அப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் வீசிய பந்தில் தவானுக்கு இடது கை பெரும் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.அதனால் உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேற அவருக்கு பதில் ரிஷிப் பண்ட் சேர்க்கப்பட்டார்.
கடைசியாக பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சதைபிடிப்பு காரணமாக வெளியேறினார். அதனால் அடுத்து மூன்று போட்டு விளையாட மாட்டார் என இந்திய அணி கேப்டன் கோலி அறிவித்தார்.
தற்போது பயிற்சி போட்டியின் போது பும்ரா வீசிய பந்தில் விஜய் ஷங்கர் காயம் ஏற்பட்டது. பும்ரா வீசிய பந்து விஜய் சங்கர் கால் பெருவிரலில் அடிபட்டதால் வலியால் துடித்தார்.பிறகு மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து முதலுதவி அளித்தனர்.இது குறித்து அணி நிர்வாகத்திடம் கேட்டபோது பும்ரா வீசிய பந்தில் பெருவிரல் காயம் ஏற்பட்டு உள்ளது.அது லேசான காயம் தான் விஜய் சங்கருக்கு வலி சிறிது நேரத்தில் குறைந்து விடும் என கூறியுள்ளனர்.