சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு சம்பாதித்ததலிருந்து இதுவரை கொரோனா நிதிக்காக அஞ்சு பைசா கழட்டாத குருமூர்த்தி.
விஜய், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறையினர் சோதனை செய்ததை பலர் தற்போது அரசியல் செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது துக்லக் ரிப்போர்ட்டரான குருமூர்த்தியின் பதிவால் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நடிகர் விஜய் மிகவும் தாமதமாக கொரோனாவிற்கு நிதியுதவி அளித்ததற்கு காரணம் என்ன என்று கேட்க வருமான வரித்துறையினர் வாரிசு சுரட்டி கொண்டு போன பிறகு, அங்கும் இங்கும் சிதறி இருந்த பணத்தைச் சேர்த்து எடுத்து கொடுப்பதற்கு நேரம் தேவை இல்லையா? என்று பதிலளித்துள்ளார்.
இந்த பதிலுக்கு பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதில் இயக்குநரும், மாநாடு பட தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு சம்பாதித்ததலிருந்து இதுவரை கொரோனா நிதிக்காக அஞ்சு பைசா கழட்டாத குருமூர்த்தி. தன் இக்கட்டையும் கடந்து தளபதி விஜய் நேயமுடன் உதவியதை நக்கலடித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன், நிலை பிறழ்ந்த செயல் இது என்றும் கூறியுள்ளார். மேலும் வருமான வரித்துறையினருக்கு கடிதம் எழுதி அனுமதி வாங்கிய காரணத்தால் தான் நிதியுதவி செய்ய காலதாமதம் ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது குருமூர்த்திக்கு எதிராக எதிர்ப்புகள் பல கிளம்பியுள்ளது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…