அஞ்சு பைசா நிதியாக கொடுக்காதவர்கள் விஜயை பத்தி பேசுறிங்களா.?

Default Image

சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு சம்பாதித்ததலிருந்து இதுவரை கொரோனா நிதிக்காக அஞ்சு பைசா கழட்டாத குருமூர்த்தி.

விஜய், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறையினர் சோதனை செய்ததை பலர் தற்போது அரசியல் செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது துக்லக் ரிப்போர்ட்டரான குருமூர்த்தியின் பதிவால் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நடிகர் விஜய் மிகவும்  தாமதமாக  கொரோனாவிற்கு நிதியுதவி அளித்ததற்கு காரணம் என்ன என்று கேட்க வருமான வரித்துறையினர் வாரிசு சுரட்டி கொண்டு போன பிறகு, அங்கும் இங்கும் சிதறி இருந்த பணத்தைச் சேர்த்து எடுத்து கொடுப்பதற்கு நேரம் தேவை இல்லையா? என்று பதிலளித்துள்ளார். 

இந்த பதிலுக்கு பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதில் இயக்குநரும், மாநாடு பட தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு சம்பாதித்ததலிருந்து இதுவரை கொரோனா நிதிக்காக அஞ்சு பைசா கழட்டாத குருமூர்த்தி. தன் இக்கட்டையும் கடந்து தளபதி விஜய் நேயமுடன் உதவியதை நக்கலடித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன், நிலை பிறழ்ந்த செயல் இது என்றும் கூறியுள்ளார். மேலும் வருமான வரித்துறையினருக்கு கடிதம் எழுதி அனுமதி வாங்கிய காரணத்தால் தான் நிதியுதவி செய்ய காலதாமதம் ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது குருமூர்த்திக்கு எதிராக எதிர்ப்புகள் பல கிளம்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்