பரபரப்பு…இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!

Default Image

இலங்கை:பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. மேலும்,பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணையை வாங்க நீண்ட தொலைவிற்கு வரிசையில் நிற்கின்றனர்.குறிப்பாக,13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது.

பிரதமர் பதவி விலகலா?:

இதனால்,அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டம் வெடித்த நிலையில்,பிரதமர் மஹிந்த ராஜபக்ச  தனது இராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஞாயிற்றுக்கிழமை கொடுத்ததாக  தகவல் வெளியானது.ஆனால் இந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமரின் ஊடகச் செயலாளர் தெரிவித்திருந்தார்.

அமைச்சர்கள் ராஜினாமா?:

இந்நிலையில்,பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் அனைத்து அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.

மேலும்,அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் செயலாளரிடம் பதவி விலகல் பற்றி கூறிவிட்டதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

இதனால்,புதிய அமைச்சரவை விரைவில் அமைக்கப்படும் என இலங்கை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்