அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும் – போரிஸ் ஜான்சன்
அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் பாகிஸ்தான் அரசிடம் கெட்கொண்டுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், தெற்காசிய நாடுகளின் அனைத்து குடிமக்களுக்கும் “அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
அதாவது, வடக்கு நகரமான பெஷாவரில் அஹ்மதி மெஹ்மூத் கான் கொல்லப்பட்டதாக சமீபத்திய தகவல்களுக்குப் பிறகு இந்த பிரச்சினை எழுந்தது. நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்காவது அஹ்மதி இவர். இந்த, விவகாரம் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இம்ரான் அகமது கான், பாகிஸ்தானில் அகமதி பிரிவினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுவதை பற்றியும், அதை தடுக்க பிரிட்டன் அரசு குரல் கொடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மோசமான நிலைமையை இந்தியா கடந்த காலங்களில் பல முறை எடுத்துரைத்துள்ளது, குறிப்பாக சிறுபான்மை இந்து, சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை பலவந்தமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.