பூமியின் தன்மையை குறித்து அறிவதற்காக வேற்றுகிரக வாசிகள், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்பு தலைவர் சர்ச்சைக்குள்ளான கருத்தை தெரிவித்துள்ளார்.
பூமியை சார்ந்திராமல் வேற்று கிரகங்களில் வசிப்பதாக கூறப்படக்கூடிய ஏலியன்ஸ்கள் உண்மையில் இருக்கிறார்களா என்பது குறித்து பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும், இந்நாள் வரையில் அதுகுறித்த தெளிவான உண்மைகள் அறியப்படாமலே உள்ளது. இதனால் ஏலியன்ஸ் என்பது, கற்பனையான ஒன்றாகவே மனிதர்களால் நம்பப்படுகிறது. இந்நிலையில் வேற்றுகிரக வாசிகளான ஏலியன்ஸ் குறித்து இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு தலைமை அதிகாரியாக இருந்த ஹெய்ம் எய்ஸ்ட் சர்ச்சையான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வேற்றுகிரக வாசிகள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாமல் மறைந்து வாழ்ந்து வருவதாகவும், அமெரிக்க அரசுடன் வேற்றுகிரக வாசிகள் பூமியின் தன்மை குறித்து கண்டறிவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மக்களுக்கு அறிவிக்க முயன்றபோது மக்கள் தங்கள் குறித்து கேள்விப்பட்டால் அச்சமடைவார்கள் என கூறி டிரம்ப்பை வேற்றுகிரக வாசிகள் தடுத்ததாகவும் கூறியுள்ளார். இவரது கருத்து தற்பொழுது மக்கள் மத்தியில் குழப்பத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…