காதலனுடன் அருகிலேயே இருக்க ஆசைப்பட்டு 32 கோடி செலவழித்த ஆலியா பட்!

தனது காதலன் வீட்டின் அருகில் இருக்க வேண்டும் என்ற ஆசையால் ஏற்கனவே அப்பார்ட்மெண்ட் இருந்தாலும் தற்பொழுது ரன்பீர் இருக்கும் அப்பார்ட்மெண்டில் 32 கோடி செலவு செய்து அலியாபட் ஒரு இடத்தை வாங்கி உள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களாக வலம் வரக்கூடிய அலியாபட் மற்றும் ரன்வீர் கபூர் ஆகிய இருவருமே காதலர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஆலியா தனது சகோதரியுடன் மும்பையில் வசித்து வருகிறார். அங்கு 13 கோடி மதிப்பில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில் அவரது காதலர் ரன்வீர் கபூர் அவர்கள் பாலி ஹில் பகுதியில் வாஸ்து என்ற சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் 2470 சதுர அடியில் ஒரு அப்பார்ட்மெண்டில் வாங்கி, இந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் ரன்பீர் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தனது காதலனுக்கு அருகில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஆலியா தற்போது 32 கோடி செலவில் அந்த அப்பார்ட்மெண்டில் இடம் வாங்கி உள்ளதாகவும் தனது குடும்பத்தார், ரன்பீர் கபூர், இயக்குனர்கள் மற்றும் நண்பருடன் சேர்ந்து அண்மையில்தன் அவரது வீட்டில் பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்பொழுது வீட்டில் இன்டீரியர் ஒர்க் நடைபெறுவதாகவும் அதற்காக ஷாருக்கானின் மனைவியிடம் கேட்டு உள்ளதாகவும் விரைவில் வேலைகள் முடிந்ததும் தனது காதலனின் வீட்டு அருகிலேயே குடியேற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025