கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பைக் சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் தனது சாதனையை முறியடிக்கும் முயற்சியில் உயிரிழந்துள்ளார்.
அலெக்ஸ் ஹார்வில் சிறந்த பைக் சாகச வீரர். அமெரிக்காவை சேர்ந்த இவருக்கு 28 வயதாகிறது. இவர் பல பைக் சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். மேலும், பைக் சாகசத்தால் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில் தான் படைத்த சாதனையை தானே முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரில் இருக்கும் மோசஸ் ஏரி அருகே அவரது பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. இவர் சாகச ஓடுதளத்தில் பைக்கில் வேகமாக பயணித்துள்ளார். அப்போது சீறி பாய்ந்ததில் தவறுதலாக மணல் குன்று மேலே பைக் மோதியுள்ளது. அதில் அலெக்ஸ் ஹார்விலின் தலைக்கவசம் கழன்று விழுந்துள்ளது.
இதன் காரணத்தால் அலெக்ஸ் ஹார்விலுக்கு பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை சமாரிட்டன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அலெக்ஸ் ஹார்வில் உயிரிழந்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…