ஒரே ஒரு கண் மட்டும் கொண்ட அல்பினோ சுறா! ஆச்சர்யத்தில் ஆழ்ந்த மீனவர்கள்!
ஒரே ஒரு கண் மட்டும் கொண்ட அல்பினோ சுறா.
இந்தோனேசியாவில், மாலுகு மாகாணத்தில், மீனவர்களின் வலையில், ஒரு வயதுடைய சுறா ஒன்று இறந்த நிலையில் சிக்கியுள்ளது. இந்த சுறா சுத்தம் செய்யப்பட்டு, அதன் வயிற்றில் உள்ள குடல்கள் அகற்றப்படுவதற்காக அந்த சுறாவின் வயிறு வெட்டப்பட்டது.
இந்நிலையில், அதன் வயிற்றிற்குள், தலையின் நடுவில் ஒரு கண் பால்-வெள்ளை நிறத்தில், அதன் துடுப்புகள் மற்றும் பிற பகுதிகள் ஏற்கனவே உருவாகியிருந்த நிலையில் ஒரு குழந்தை சுறா இருந்துள்ளது.
இதுகுறித்து, 29 வயதான ஆண்டி அவர்கள் கூறுகையில், இந்த சுறான் வலையில் சிக்குவதற்கு முன்பதாகவே கர்ப்பமாக இருந்தாகவும், இதன் வயிற்றிற்குள் மூன்று குட்டிகள் இருந்ததாகவும், அதில் ஒன்று தலையின் நடுவில் ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த சுறா குறித்து, உள்ளூர் கடல் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர். ஆனால், அந்த சுறாவை அவர்கள் கண்டதும், அது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சுறாவின் பால் நிறத்திற்கு காரணம் அல்பினிசம் குறைந்த அளவில் காணப்படுவது தான் காரணம் என்று கூறியுள்ளனர்.