அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் பலி.! பிரான்ஸ் ராணுவம் அறிவிப்பு.!
உலக பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான அல்கொய்தா அமைப்பின் வட ஆப்பிரிக்க தலைவரான அப்தெல்மாலிக் டுரூக்டெல் பிரான்ஸ் நாட்டின் ராணுவ படையின் மூலம் கொல்லப்பட்டார் என பிரான்ஸ் ராணுவ மந்திர தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் பயங்கரவாதிகளுக்கும் பிரான்ஸ் ராணுவத்தினருக்கும் இடையேயான சண்டையில் ஆப்பிரிக்க அல்கொய்தா அமைப்பின் தலைவர் அப்தெல்மாலிக் டுரூக்டெல் பிரான்ஸ் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.
ஆப்பிரிக்க அல்கொய்தா அமைப்பின் தலைவர் இறப்பானது அந்த அமைப்பிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதி மீது 2007 ஆம் ஆண்டு ஐநா பொருளாதார தடையை விதித்திருந்தது. காரணம், இவர் பல்வேறு தீவிரவாத காரியங்களுக்கு வெடிமருந்துகள், வெடிகுண்டு சாதனங்களையும் உருவாக்கி கொடுத்துள்ளார்.
தற்போது மாலி நாட்டில் பிரான்ஸ் நாட்டு படை வீரர்களால் அப்தெல்மாலிக் டுரூக்டெல் பலியாகியுள்ளார் இந்த தகவலை பிரான்ஸ் ராணுவ மந்திரி புளோரன்ஸ் பார்லி தெரிவித்துள்ளார்.