அண்டர்டேக்கர் அழைத்த சண்டைக்கு வியக்கும் பதிலளித்த அக்ஷய் குமார்..!

சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கருக்கு வியக்கவைக்கும் வித்தியாச பதில் அளித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.
பிரபல பாலிவுட் நடிகர்களில் முன்னணி நடிகராக திகழ்பவர் அக்ஷய் குமார். உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் 1996 ஆம் ஆண்டு கில்லாடியோன் கா கில்லாடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் ஒரு மல்யுத்த வீரராக அண்டர்டேக்கர் போன்ற வேடமிட்ட ஒருவருடன் சண்டையிட்டு வெற்றி பெறுவார். தற்போது இந்த படம் முடிவடைந்து 25 வருடங்கள் ஆன காரணத்தால் இதனை கொண்டாடும் விதமாக, அக்ஷய் குமார் சமூக வலைத்தளத்தில் ஒரு மீம் பகிர்ந்துள்ளார்.
அந்த மீமில், அண்டர்டேக்கரை தோற்கடித்த பிராக் லெஸ்னர், ட்ரிபிள் ஹெச், ரோமன் ரெய்ன்ஸ் ஆகியோரின் படங்களோடு அக்ஷய் குமார் படமும் இருக்கும். இந்த மீம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் இதை வைரலாக்கி வருகின்றனர். வைரலான இந்த மீமை பார்த்த அண்டர்டேக்கர், அக்ஷய் குமாருக்கு பதில் தெரிவித்துள்ளார்.
அதில் அண்டர்டேக்கர், உண்மையான ரீமேட்சுக்கு எப்போது நீங்கள் தயார் என்று கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு அக்ஷய் குமார் அளித்த பதில் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அக்ஷய் குமார், எனது காப்பீட்டை ஆய்வு செய்துவிட்டு கூறுகிறேன் சகோதரரே, என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். இந்த மீம் மற்றும் இருவரது உரையாடல்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025