3600 டான்சர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களுக்கான தொகையை நடிகர் அக்ஷய் குமார் வழங்கியுள்ளார்.
கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் பாதிப்பக்கப்பட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில், பிரபல நடிகரான அக்ஷய் குமார் கொரோனா முதல் அலையின்போதே திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் அதிக அளவிலான நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களை மற்றும் பல உதவிகளை செய்து வந்தார்.
அதைபோல் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், 3600 நடன கலைஞர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான உணவுப்பொருள்களை நடிகர் அக்ஷய் குமார் வழங்கியுள்ளார்.
இந்த தகவலை நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ” எனது 50 வது பிறந்த நாளை ஒட்டி அக்ஷய் குமாரிடம் நடக்குழுவினருக்கு உதவி செய்யும்படி கோரிக்கை வைத்தேன். அதை தொடர்ந்து 3600 நடன கலைஞர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களுக்கான தொகையை எனது அறக்கட்டளையிடம் அக்சய் குமார் கொடுத்துள்ளார். இந்த உதவிக்கு மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி…
சென்னை : இன்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் 51 பேர் உட்பட நாம்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…