ஊரடங்கில் விதிகளை மீறி ஹெலிகாப்டரில் பயணம் செய்த அக்ஷய் குமார்.!

Published by
Ragi

ஊரடங்கு காலத்தில் சிறப்பு அனுமதி பெற்று ஹெலிகாப்டரில் நாசிக்கிற்கு அக்ஷய் குமார் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அக்ஷய் குமார். இவர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் லட்சுமி பாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா காரணமாக இந்தியா முழுவதும்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு அல்லாமல் வீட்டுக்கு வெளியே செல்ல கூடாது என்றும், ஒரு ஊரிலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல கூடாது என்றும் ஆணை விடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகர் அக்ஷய் குமார் ஹெலிகாப்டரில் மும்பையில் இருந்து நாசிக்கிற்கு டாக்டரை சந்திக்க போவதாக கூறி சிறப்பு அனுமதி பெற்று சென்றுள்ளார்.

அங்குள்ள சொகுசு விடுதி ஒன்றில் அக்ஷய் குமார் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளித்ததை குறித்து சர்ச்சைகள் எழுப்பியுள்ளது. இதுகுறித்து மராட்டிய உணவுத்துறை மந்திரி ஷாகன் புஜ்பால் கூறியதாவது, அக்ஷய் குமார் சிறப்பு அனுமதி பெற்று ஹெலிகாப்டரில் நாசிக்கிற்கு சென்ற செய்தி ஊடகங்கள் மூலம் தெரிய வந்ததாகவும், அவர் தற்போது எங்குள்ளார் என்று தெரியவில்லை என்றும், இதுகுறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், யார் அவருக்கு சிறப்பு அனுமதி அளித்தது என்பதனையும், ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதிகாரிகளே பொறுப்பாவர் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

1 hour ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

2 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

4 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

4 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

5 hours ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

5 hours ago