வசூல் வேட்டையில் அஜித்தின் வலிமையான வலிமை.! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா.?!
அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் சென்னையில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் கடந்த 24- ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியானது. 2 வருடங்கள் கழித்து அஜித் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் வலிமை படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த திரைப்படம், வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. சில நேர்மறையான விமர்சனங்கள் படத்திற்கு வந்தாலும் படம் தாறுமாறாக வசூல் செய்து வருகிறது.
அந்த வகையில், வெளியான முதல் நாளே உலகளவில் 70 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், நாளுக்கு நாள் வலிமை படத்தின் வசூல் அதிகரிக்கும் நிலையில், சென்னையில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி, வலிமை திரைப்படம் வெளியான 4 நாட்களில் சென்னையில் மட்டும் 5.17 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 1.47 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.