வலிமை படத்தின் அப்டேட் குறித்து அஜித்தின் மேனேஜர் வெளியிட்ட அறிக்கை.!
வலிமை படத்தின் அப்டேட் குறித்து அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு காத்திருக்க கூறியுள்ளார்.
நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குனர்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .மேலும் அஜித் அவர்கள் ஈஸ்வர மூர்த்தி என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா விலாலனாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி உள்ளிட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் ரேஸ் காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது .
சென்னையின் புறநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பானது பின்னர் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து வருவதாக கூறப்பட்டது.அதில் அஜித் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.இதுவரை வலிமை படத்தின் அப்டேட் எதுவும் வெளி வராததால் ரசிகர்கள் சற்று கவலையில் உள்ளனர் .மேலும் பலர் அப்டேட் கேட்டு சமூக வலைத்தளங்களில் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் வலிமை படத்தின் அப்டேட் குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு… படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு. அஜித் குமார் அவர்களும் அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு. போனிகபூர் ஆகிய இருவரும் இணைந்து ’வலிமை’ படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்’ என்று குறிப்பிட்டுள்ளார் .
அறிவிப்பு pic.twitter.com/iW0P0TdG4f
— Suresh Chandra (@SureshChandraa) December 10, 2020