ரசிகர்களை ஏமாற்றிய கடிதம்..கொளுத்திப்போட்டது அவர்களா??கிடுக்குபிடி விசாரணை

Published by
kavitha

தன்னுடைய பெயரில் வெளியான போலி கடிதம் தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை சைபர் க்ரைம் பிரிவில் நடிகர் அஜித்குமார் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் அஜித்குமார் த்மிழக சினிமாவில் தனக்கென்று தனிபட்டாள ரசிகர்களை கொண்டவர்.ஆனால் பொதுவாகவே நடிகர் அஜித் பொதுவெளி மட்டுமல்லாமல் பரபரப்பாக இருக்கும் சமூக வலைதளங்களிருந்தும் சற்று தள்ளியே இருந்து வருகிறார். ஆனால் என்னவோ அவரை சம்பந்தப்படுத்தியே ஆண்டுக்கு ஒரு முறையாவது, சமூக வளைதளங்களில் பொய் செய்திகள் பரப்பபடுகிறது.இதனால் நடிகர் அஜித் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Image result for ajithkumar LETTER ISSUE

தற்போது நடிகர் அஜித்தின் கையெழுத்தோடு சமூகவளைதங்களில் சுற்றி திருந்த கடிதம்  போலி என்று தெரிய வந்துள்ளது.அவ்வாறு வெளியான கடித  அறிக்கையில், அஜித் கூறுவது போல் நான் மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த வகையில் உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கம் இது என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் இதன் மூலம்  நீங்கள் என்னுடன் இணைந்திருக்கலாம் என்று அந்த கடிதத்தில்கூறப்பட்டிருந்தது.



இந்நிலையில் தீயாய் பரவிய இந்த போலி கடிதம் ஆனது கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி நடிகர் அஜித் தன் கையெழுத்துடன் வெளியிட்டகடிதத்தை அப்படியே அச்சு அசலாக  கொண்டு அதில் சில மாற்றங்களை  செய்து வலைதளங்களில் மோசடி கும்பல் வெளிட்டுள்ளது தெரியவந்துள்ளது.மோசடி கும்பல் நடிகர் அஜித்தின் கையெழுத்து, அவருடைய பெயரையும் அப்படியே வைத்து அக்கடிதத்திலிருந்து உள்ளடக்கத்தை மாற்றி தங்களுக்கு சாதகமான உள்ளடக்கத்தை எழுதி மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி, உத்யோகபூர்வமான போன்ற வார்த்தைகள் இலங்கை தமிழர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என்று கூறப்படுகிறது இக்கடிதத்தை இலங்கை வாழ் தமிழரால் யாராவது தான் தயாரித்து இருக்கணும்  என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது.

இந்நிலையில் தன் ரசிகளுக்கு தன் பெயரில் பரவிய போலியான கடித விவகாரத்தை அறிந்து நடிகர் அஜித் தாமதிக்காமல்  உடனடியாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்து அவருடைய தரப்பில், அவரது வழக்கறிஞர் குழு தற்போது பொதுவான ஒரு எச்சரிக்கை கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், நடிகர் அஜிதுக்கு அதிகாரப்பூர்வமாக சமூக ஊடக கணக்குகள் எதுவும் கிடையாது தற்போது வெளியானது போலியான கடிதம் என்று உறுதிபட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் கையெழுத்தை வைத்து மோசடி செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அக்கடிதத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் நடிகர்  அஜித்தின் கையெழுத்து, அவருடைய லெட்டர் பேடையும் தவறாக பயன்படுத்தி, மோசடி செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புகாரின் மீது சென்னை போலீசார் விசாரணையை முடிக்கி விட்டுள்ளனர். முதல்கட்டமாக, இக்கடிதத்தை வெளியிட்ட முகநூல், டிவிட்டர் கணக்குகள் யாருடைய பெயரில் இருக்கிறது? எங்கிருந்து வெளியிடப்பட்டது என்ற கோணத்தில் விசாரணை தொடங்கி விட்டனர்.

பொதுவாக  சமூக வளைதங்களில்  விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடிக்கும் என்பதை ஊரே அறிந்தது ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக. அஜித்தின் கையெழுத்தை போலவே போலியான கடிதத்தை தயாரித்து அச்சமில்லாமல் வெளியிட்டு பரப்பரப்பை ஏற்படுத்தியது யார் என்பதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்வார்களா என்பது விரைவில் தெரியவரும்.

Recent Posts

“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…

9 minutes ago

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி., உங்கள் பாதையே வேண்டாம்! பாகிஸ்தானை தவிர்த்த பிரதமர் மோடி!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

35 minutes ago

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : “அமித் ஷா பதவி விலகனும்”… திருமாவளவன் கடும் கண்டனம்!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…

2 hours ago

‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…

2 hours ago

“மோடி கிட்ட போய் சொல்லு”… கணவனை இழந்து கெஞ்சிய பெண்ணிடம் பயங்கரவாதி சொன்ன விஷயம்?

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…

3 hours ago

பஹல்காமில் 26 பேரை கொன்ற பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு.!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…

3 hours ago