வாரணாசிக்கு விசிட் அடித்த அஜித் ஸ்வீட் கடைக்காரருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!

வலிமை படபிடிப்புக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு வாரணாசிக்கு சுற்றுலாவாக சென்ற நடிகர் அஜித் பிரபல ஸ்வீட் கடை ஓனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக வலிமை படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்தார். இந்நிலையில், தற்பொழுது சில நாட்களுக்கு படப்பிடிப்புகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வாரணாசியை நோக்கி சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சந்தோசமாக சுற்றி திரிந்த அஜித் அங்கு தெருவோரத்தில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றின் புகழ்பெற்ற ஸ்வீட்டான பனாரசி எனும் ஸ்வீட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
தலையில் தொப்பியுடன் முகக்கவசம் அணிந்தபடி வந்த அஜித்தை அடையாளம் தெரியாத கடைக்காரர் அவரை கண்டுகொள்ளவில்லை. ஓரமாக நின்று ஸ்வீட்டை சாப்பிடுவதற்காக அஜித் முகக்கவசத்தை கழற்றியதும் கடைக்காரர் நீங்களா என அதிர்ந்து போயுள்ளார். மேலும், அவரது எளிமையையும் கடைக்காரர் புகழ்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் அடுத்த நாளும் அந்த கடைக்கு வந்த அஜித் முன்தினம் சுவைத்த உணவின் ருசிக்காக மீண்டும் அதே ஸ்வீட்டை வாங்கியுள்ளார். இன்ப அதிர்ச்சியடைந்த கடைக்காரர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன், தனக்கு மிகுந்த மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!
February 23, 2025
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025