அஜித் சார் என் புள்ளையா நடிச்சது, நான் செஞ்ச புண்ணியம் – நடிகை சுமித்ரா.!

Default Image

வலிமை படத்தில் அஜித் சார் என் புள்ளையா நடிச்சது, நான் செஞ்ச புண்ணியம் னு நினைக்குறேன் என்று நடிகை சுமித்ரா தெரிவித்துள்ளார். 

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்ததாக நடிகர் அஜித்குமார் வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் படமாக்கப்படவுள்ளது. வலிமை படத்தின் நாங்க வேற மாறி பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயா, புகழ், அச்சியுத் குமார், யோகி பாபு,ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், வலிமை படத்தில் நடிகை சுமித்ரா அஜித்திற்கு அம்மாவாக நடிக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் நேர்காணல் மூலம் வலிமை படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில் ” வலிமை திரைப்படத்தில் நடித்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எனக்கு இரண்டு கெட்டப் உள்ளது. எனது சிறிய வயது கதாபாத்திரத்தில் என் உன்மையான மகள் உமா நடித்துள்ளார். படம் மிகவும் அருமையாக இருக்கும். படத்தில் அஜித் சார் என் புள்ளையா நடிச்சது, நான் செஞ்ச புண்ணியம் னு நினைக்குறேன். செட்ல யாருக்கு கஷ்டம் இருந்தாலும் தெரிஞ்சுப்பாரு, அது என்னன்னு பாருங்க னு ஸ்பாட்லயே சொல்லுவாரு. அஜித் சாருடன் நடித்தது மிகவும் சந்தோசம்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு நடிகை சுமித்ரா அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் நடிகை தமன்னாவிற்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்