திரைத்துறையை தாண்டி அஜித் குமாரின் பயணம்

Default Image

நடிகர் அஜித்குமார்  சினிமாவில் மட்டுமல்லாது பல துறைகளிலும் தன்னை ஈடுபடுத்துவதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார் .இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா BMW ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர்.

நடிப்பை தவிர்த்து பைக் ரேசிங்,கார் மற்றும் விமான வடிவமைப்பாளர் போன்ற பல திறமைகளை கொண்டுள்ளார். கார் மற்றும் பைக் ரேஸ் சம்பந்தமான பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.அந்த வகையில் பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றார்.

பல ட்ரோன் ஹெலிகாப்டரை வடிவமைத்து அஜித் வெற்றி கண்டுள்ளார்.இதன் விளைவாகத்தான் அஜித் சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் சோதனை பைலட்டாகவும் ஆலோசகராகவும் நியமனம் செய்யப்பட்டார்.இதனால் புதிதாக உருவாக்கப்பட்ட டீம் தக்‌ஷா என்ற மாணவர் குழு உருவாக்கப்பட்டது.இதற்கு அஜித் முக்கிய ஆலோசகராக இருந்து வந்தார் .டீம் தக்‌ஷா அஜித் தலைமையில் இயங்கி வந்த நிலையில் ட்ரோன் ஹெலிகாப்டர் ஓன்று அந்த குழுவால் உருவாக்கப்பட்டது.இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் இந்த ட்ரோன் பல சாதனைகளை படைத்துள்ளது.

டீம் தக்‌ஷா குழு சமீபத்தில் ஒரு சாதனை படைத்துள்ளது.அதாவது இந்த ட்ரோன் வானத்தில் 6 மணி நேரம் 7 நிமிடம் பறந்து உலகிலேயே அதிகம் நேரம் பறந்த ட்ரோன் என்ற சாதனையை படைத்தது. இந்த ட்ரோன் அதிக நேரம் இயங்குவதற்கு காரணம் என்னவென்றால் பெட்ரோல் மூலம் எரிசக்தி மின்சாரமாக மாற்றப்படுவதால் அதிக நேரம் இயங்குகிறது.இதனை ரிமோட் மூலம் இல்லாமல் கணிணி மூலம் இயக்கப்படுகிறது.இதனால் எவ்வளவு உயரம் பறக்க வேண்டும் என்பதை கூட தெளிவாக அளவிட்டு நிலைநிறுத்த முடியும்.10 கிலோ எடை கொண்ட பொருளை இந்த ட்ரோன் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.குறிப்பாக  அஜித்தின் வழிக்காட்டுதலில் மாணவர்கள் செய்த சாதனை பலரையும் வியக்க வைத்துள்ளது.சினிமா மட்டும் அல்லாது பிற துறைகளிலும் தன்னால் இயன்றவற்றை செய்வதில் அஜீத் தன்னை வல்லவராக நிரூபித்து வருகிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
Kamala Harris - US Election
06.11.2024 Power Cut Details
VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin
yellow alert rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar