VidaaMuyarchi - AjithKumar [file image]
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்புக்காக அஜித் விமானம் மூலம் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று இருந்தார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்
அஜர்பைஜானில் நடைபெற்று வரும் 2ஆம் கட்ட படப்பிடிப்பில் அஜித், அர்ஜுன், ஆரவ், த்ரிஷா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நடிகர் ஆரவ் இணையத்தில் வெளியிட்டுள்ளதால், படத்தின் முதல் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்காக அஜித் தனது உடல் எடையில் 15 கிலோ வரை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதை உறுதிபடுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான புகைப்படத்தில் அஜித் சற்று உடல் எடை குறைந்தே காணப்படுகிறார். இதற்கு காரணம் என்னவென்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அவுங்க இயக்குனா மட்டும் தான் விஜய்க்கு மியூசிக் போடுவேன்! ஜிவி பிரகாஷ் பேச்சு!
அவரது படத்திற்காகவோ அல்லது நிரந்தரமாகவோ என்று தெரியவில்லை. ஆனால், அவர் அசைவம் சாப்பாடு சாப்பிடுவதை குறைத்து வந்த அவர், முற்றிலுமாக நிறுத்திவிட்டார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தான் அவரது உடல் எடை குறைப்பு காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. பழைய தோற்றத்திற்காக இது முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், விடாமுயற்சி படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ் தற்போது இணைந்துள்ளார். ஷூட்டிங் தொடங்கிய நாளில் இருந்தே நீரவ் ஷாவுக்கும் மகிழ் திருமேனிக்கும்ஒத்துப் போகவில்லையாம். ஒருகட்டத்திற்கு மேல், வேறொரு கமிட்மென்ட்டுகளை காரணம் காட்டி வெளியேறியதாக சொல்லப்படுகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…