அஜித் சார் மிகவும் அமைதியான மனிதர் – கிருஷ்ணா..!!

நடிகர் கிருஷ்ணா அஜித் சார் மிகவும் அமைதியான ஒரு நல்ல மனிதர் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். தமிழகத்தில் மிகவும் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கும் உள்ளது. அஜித்துடன் நடிக்க பல நடிகர்கள் நடிகைகள் ஆர்வத்துடன் காத்திருக்கார்கள் என்றே கூறலாம். மேலும் அஜித்தை பல நடிகர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு . அந்த வகையில் நடிகர் கிருஷ்ணா சமீபத்தில் அஜித் குறித்து கூறுகையில் ” பில்லா படத்தின் போது அஜித் சாரை நான் பார்த்தேன். மிகவும் அமைதியான ஒரு நல்ல மனிதர். அவர் தான் இருக்கும் இடத்தை சந்தோசமாக வைத்துவிட்டு தான் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்” என்றும் கூறியுள்ளார்.
. @Actor_Krishna about Ajith Sir
‘Ajith Sir Is Very Humble And quiet #Valimai #AdvanceHBDTHALAAjith
— ❤ Thala AJITH fan ❤???? (@thala_speaks) April 3, 2021
மேலும் நடிகர் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் 10 நாட்கள் மட்டும் நடைபெறவுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.