கஸ்தூரியை கிழவி என்று கூறிய அஜித் ரசிகருக்கு சரியான பதலடியை கொடுத்துள்ளார்.
நடிகை கஸ்தூரி, வழக்கமாக எதாவது சமூக கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவார். சில மாதங்களாக இது போன்ற கருத்துக்களை பதிவிட்டதால் இவருக்கும், அஜித் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினைகள் நிலவி வருகிறது .சமீபத்தில் அஜித் ரசிகர்கள் ஆபாசமான முறையில் பேசியதை அடுத்து அஜித் மற்றும் மேனேஜருக்கு டுவிட்டர் மூலம் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கஸ்தூரி பிரபுவுடன் நடித்த வீடியோவை பதிவிட்ட ரசிகர் ஒருவர், இது நம்ம கஸ்தூரி கிழவி தானே. அந்த காலத்தில் சரியான ஃபிகரா இருந்திருப்பார் போல என்று பதிவு செய்துள்ளார். இதற்கு பதிலளித்த கஸ்தூரி, எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித் அவர்கள் கேட்டாரா? அவர் பேரை சொல்லிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? இதுல காமெடி என்னன்னா, கஸ்தூரி கிழவி, அஜித்தை விட ஐந்து வயது குறைந்தவள் நான், ஹைய்யோ என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் அஜித் ஒரு ஜென்டில்மேன், அவரை தான் மதிக்கிறேன். இதுபோன்ற பதிவுகளை செய்து உண்மையான அஜித் ரசிகர்களை களங்கப்படுத்ததாதீர்கள் என்று கூறியுள்ளார். இவரது இந்த ட்வீட்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…