“சைக்கிள் ரைடு” செய்த தல அஜித்…வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் அஜித்குமார் சைக்கிளிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்த நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வலிமை படம் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 15 ஆம் தேதி அறிவித்தார். இதனால் அஜித் ரசிகர்கள் எப்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
மேலும் தினம் தினம் வலிமை அப்டேட் வரவில்லை என்றாலும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக சென்னை எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்துக்கு அஜித் வந்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது நடிகர் அஜித் கொல்கத்தாவில் சைக்கிளிங் செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அஜித் சைக்கிளிங் செய்வதை பார்தவர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுத்துள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்.
Here’s Some More Exclusive Pics Of THALA AJITH During His Cycling Today!! ????????#Valimai | #ThalaCycling pic.twitter.com/LTYmeQULvm
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 25, 2021
Latest Pics Of THALA AJITH During His Cycling Today!! ????????#Valimai | #ThalaAJITH pic.twitter.com/B56pU3yqAK
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 25, 2021
Here’s Few More Exclusive Pics Of THALA AJITH During His Cycling Today!! ????????#Valimai | #ThalaCycling pic.twitter.com/kcHr2MqXVU
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 25, 2021