தல 61 படத்திற்காக 65 நாள் கால்ஷீட் கொடுத்த அஜித்..??
தல 61 படத்திற்காக நடிகர் அஜித்குமார் 65 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை . இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒத்திவைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் 61 வது திரைப்படத்தை இயக்கப் போவதும் ஹெச்.வினோத் என்பது உறுதியாகிவிட்டது. வலிமை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே அடுத்த படத்துக்கான ஒன்லைன் கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம் அஜித். மேலும் படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக நடிகர் அஜித் 65 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.