பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க..?அஜித் ரசிகர்களை திட்டிய கஸ்தூரி.!
- அஜித் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் டுவிட்டரில் ஆபாசமாக ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார்.
- இந்த பதிவிற்கு ஒரு சிலர் அதைவிட ஆபாசமாக கமெண்ட் செய்து வந்து உள்ளனர்.அதில் ஒரு டுவிட்டர் பயனாளி நடிகை கஸ்தூரியையும் அந்த கமெண்டில் இழுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகை கஸ்தூரி முன்னாள் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போனவர் என்றால் அது நடிகை கஸ்தூரி ,அதே போல தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சர்சையான பதிவால் சிக்கி விடுவார்.
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாமினேஷனில் வந்த முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் கஸ்தூரி வழக்கம்போல தனது ட்விட்டர் பக்கத்தில் பல சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வந்தார்.
ட்விட்டரில் கஸ்தூரி தன்னை யாராவது கலாய்த்தால் அவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து விடுவார்.இந்நிலையில் அஜித் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் டுவிட்டரில் ஆபாசமாக ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார். இந்த பதிவிற்கு ஒரு சிலர் அதைவிட ஆபாசமாக கமெண்ட் செய்து வந்து உள்ளனர்.அதில் ஒரு டுவிட்டர் பயனாளி நடிகை கஸ்தூரியையும் அந்த கமெண்டில் இழுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார். அதில் “மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க” என பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவை கஸ்தூரி #dirtyAjithFans என்ற ஹாஸ்டாக் பயன்படுத்தி பதிவிட்டு உள்ளார்.இதற்கு நடிகை கஸ்தூரியை கலாய்த்து அஜித் ரசிகர்கள் #DirtyKasthuriAunty என்ற ஹாஸ்டாக் பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர்.