மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சுத்தப்படுத்தி, அவருக்கு முடி திருத்தம் செய்து, புத்தாடை அணிவித்து மகிழ்ந்தனர். இவர்களது சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு நடிகர்களுக்கும் ரசிகர் மன்றங்கள் உள்ள நிலையில், அவர்கள் மக்களுக்கு தங்களால் என்ற வரை சமூக சேவை செய்து வருகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்ட அஜித்குமார் ரசிகர் மன்றத்தினர், மக்களுக்கு பல்வேறு நற்பணிகளை செய்து வருகின்ற நிலையில், வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில், ஒவ்வொரு ஊராக சென்று, மனநிலை பாதிக்கப்பட்ட மக்களை தேடி செல்கின்றனர்.
இதனையடுத்து, அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று, அவர்களை மீட்டு, குளிக்க வைத்து, சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில், தெருவில் சுற்றி திரிந்த, மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சுத்தப்படுத்தி, அவருக்கு முடி திருத்தம் செய்து, புத்தாடை அணிவித்து மகிழ்ந்தனர். இவர்களது சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதுபோல, இவர்கள் விபத்தில் கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்குதல், மரம் நடுதல் போன்ற சமூக பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…