உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்: சண்டே செகண்ட் சிங்கிள்..!
வலிமை படத்தின் 2-வது வரும் 5ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது.
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “வலிமை” திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த்துள்ளார். இந்தப் படத்தின் “நாங்க வேற மாறி” என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றள்ளது.
இந்த பாடல் யூடியூப் இணையதளத்தில் 35 மில்லியன் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், வலிமை படத்தின் 2-வது பாடலுக்கான ப்ரோமோ இன்று வெளியானது. யுவன் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் சித்ஸ்ரீராம் பாடியுள்ள இப்பாடல் வரும் 5-ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது.