இந்த ஆண்டு தலைவர் தீபாவளியா..? தல தீபாவளியா…?

ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படமும் அஜித் நடித்து வரும் வலிமை படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் வருகின்ற நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது அதைபோல் நடிகர் அஜித் குமார் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு காட்சிகள் மீதமுள்ளதாகவும் அந்த கடைசி கட்ட கட்சியை வருகின்ற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் எடுப்பதற்காக வலிமை படக்குழு ஸ்பெயின் நாட்டிற்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் வலிமை படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடாமல் நேரடியாக தீபாவளி தினத்தில் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்த படத்தை 2020 தீபாவளிக்கு வெளியீடவுள்ளதாக போனிகபூர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025