அஜித் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சூப்பர் ! முன்னணி தெலுங்கு பிரபலத்தின் ஓபன் டாக் !
அஜித் கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார்.இவர் நடிப்பில் இந்த வருடம் “விஸ்வாசம்” ,”நேர்கொண்டபார்வை” இரண்டு படங்கள் வெளி வந்தன.அந்த படங்களை இவரது ரசிகர்கள் தூள் கிளப்பி கொண்டாடி விட்டார்கள் என்ற சொல்லலாம்.
அந்த படங்களும் மாபெரும் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜித் அடுத்த படத்திலு நடிக்க ரெடியாகி விட்டார்.இந்நிலையில் அஜித்தை கொண்டாடாத பிரபலங்களே இருக்க முடியாது.
அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகரான சிரஞ்சீவி சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவரிடம் உங்களுக்கு பிடித்த தமிழ் படங்கள் என்ன ? என்று கேட்க பட்டது.அதற்கு அவர் வேதாளம் ,விஸ் வாசம் என்று கூறியுள்ளார்.அஜித் இப்படி சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவது சூப்பர் என்று கூறியுள்ளாராம்.