உலகநாயகனின் பாராட்டு விழாவில் தல – தளபதி கலந்துகொள்ளவில்லையாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் கடந்த 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து 8ஆம் தேதி கமல்ஹாசனின் தயாரிப்பு அலுவலகத்தில் இயக்குனர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இன்று கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரையுலக பயணத்தை பெருமைப்படுத்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் முதலில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் கலந்துகொள்வார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இவர்கள் இருவரும் ஷூட்டிங்கில் இருப்பதால் விழாவில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.