மறைந்த இயக்குனர் சச்சிதானந்தனா இயக்கத்தில் பிரித்வி ராஜ், பிஜு மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் “ஐய்யப்பனும் கோஷியும்”.இந்த படம் மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து தரப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தில் இடம்பெற்ற ‘கலகாத்தா’ பாடலும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், டெல்லியில் 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஐய்யப்பனும் கோஷியும் திரைப்படம் 4 விருதுகளை வென்றுள்ளது. அதன்படி, சிறந்த இயக்குநர் – கே ஆர் சச்சிதானந்தன், சிறந்த துணை நடிகர் – பிஜு மேனன், சிறந்த ஸ்டண்ட் அமைப்பு – ராஜசேகர், மாபியா சசி சிறந்த பின்னணி பாடகி (கலகாத்தா பாடல்) பாடிய நஞ்சம்மா உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…