ஐஸ்வர்யா ராஜேஷ் தனது 25வது படத்திற்கு பூமிகா என்று பெயரிடப்பட்டுள்ள டைட்டிலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்து வந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2010இல் வெளியான நீதான் அவன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதனையடுத்து தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் ஒரு இந்தி படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் திரையுலகில் அறிமுகமாகிய 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 25 படங்கள் என்ற மைல்கல்லை பிடித்துள்ளார். தற்போது அவரது 25வது படத்தின் டைட்டில் மோஷன் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது.அதனை சிவகார்த்திகேயன்வெளியிட்டுள்ளார் . ‘பூமிகா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தயாரிக்க ரவீந்திரன் பிரசாத் இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைக்க ராபர்ட்டோ ஜாஜ்ரா ஒளிப்பதிவு செய்கிறார். லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ள இந்த படத்தினை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சினிமாயுலகில் 10 ஆண்டுகளில் 25 படங்கள் மைல்கல்லை தொட்ட ஐஸ்வர்யா ராஜேஷூக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…