‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக்கில் நடிக்கிறாரா ஐஸ்வர்யா ராஜேஷ்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கண்ணன் ஜெயம் கொண்டான் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.அதன் பின் கண்டேன் காதலை ,சேட்டை ,வந்தான் வென்றான் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் கடைசியாக சந்தானத்தின் பிஸ்கோத் படத்தினை இயக்கியிருந்தார்.தற்போது அதர்வாவின் தள்ளி போகாதே படத்தினை இயக்கி வரும் இவர் அடுத்ததாக மலையாள மெகா ஹிட் படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
சமீபத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் ரீமேக் உரிமையை கண்ணன் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.காரைக்குடியில் மார்ச் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)