கடந்த 8-ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் சில நிமிடங்களில் லாஜ் அபத் என்ற பகுதியில் உள்ள விவசாய இடத்தில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 176 பேரும் பலியானார்கள்.
இதில் ஈரானியர்கள் 82 பேரும், கனடாவை சேர்ந்த 63 பேரும், உக்ரைனை சேர்ந்த 11 பேரும், சுவீடனை சேர்ந்த 10 பேரும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 4 பேரும், ஜெர்மனி, இங்கிலாந்தை சேர்ந்த தலா 3 பேரும் உயிரிழந்தனர். பின்னர் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறால் இச்சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் தான் இந்த விமானம் சிக்கியதாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்ததை தொடர்ந்து மறுத்து வந்த இரான், தற்போது முதல் முறையாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில், விமானத்தை ஏவுகணையால் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் இன்று காலை இரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மனித தவறுகளின்’ காரணமாக உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது ஈரான் அரசு. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…