ஸ்லோவேகியாவின் பிராடிஸ்லாவா மற்றும் நைட்ராவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பெட்ரோலின் மூலம் இயங்கும் பறக்கும் கார் 35 நிமிடம் பறந்துள்ளது.
பறக்கும் காரை தயாரித்த பேராசிரியர் ஸ்டீபன் க்ளீன் இது குறித்து கூறுகையில், இந்த பறக்கும் கார் சுமார் 1,000 கி.மீ. தொலைவு, 8,500 அடி உயரத்தில் பறக்கும் என்று கூறியுள்ளார். இந்த பறக்கும் காரில் பிஎம்டபிள்யூவின் வழக்கமான என்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது பெட்ரோல்-பம்ப் மூலமாக இயங்குகிறது. இதை காராக நாம் பயன்படுத்தியதை தொடர்ந்து விமானமாக மாற்றம் செய்வதற்கு 2 நிமிடங்கள் 15 வினாடிகளே தேவைப்படும். காரிலிருந்து விமானமாக அதன் இறக்கைகளுடன் மாறும் விதத்தில் வடிவமைத்துள்ளனர்.
இந்த விமானம் சுமார் 170 கி.மீ. வேகத்தில் காற்றில் பறந்துள்ளது. இந்த விமானத்தை சர்வதேச விமான நிலையங்களான நைட்ரா மற்றும் ஸ்லோவேகியாவில் உள்ள பிராடிஸ்லாவா ஆகியவற்றிற்கு இடையில் இயக்கியுள்ளனர். இந்த விமானத்தில் 2 நபர்கள் பயணிக்க முடியும். மேலும் இதில் 200 எடை அளவு தாங்கும் விதத்தில் தயாரித்துள்ளனர். இந்த பறக்கும் காரை ஓடுபாதையின் உதவியோடு தான் தரையிறக்க முடியும்.
தற்போதுள்ள போக்குவரத்து நெருக்கடி சூழ்நிலையில் இதுபோன்ற வாகனம் நல்ல வரவேற்பை பெறக்கூடியதாக உள்ளது. இதனையடுத்து செவ்வாய்கிழமையன்று நடந்த தொழில் கூட்டத்தில் ஐரோப்பியாவில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மைக்கேல் கோல், இந்த பறக்கும் காரை குறித்து ‘இது எங்கள் எதிர்காலத்தின் ஒரு பகுதியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டார். இதுவரை இந்த ஏர்காரிற்கு அமெரிக்காவில் 40,000 ஆர்டர்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…