சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பெட்ரோலில் இயங்கிய பறக்கும் கார்..!

Default Image

ஸ்லோவேகியாவின் பிராடிஸ்லாவா மற்றும் நைட்ராவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பெட்ரோலின் மூலம் இயங்கும் பறக்கும் கார் 35 நிமிடம் பறந்துள்ளது.

பறக்கும் காரை தயாரித்த பேராசிரியர் ஸ்டீபன் க்ளீன் இது குறித்து கூறுகையில், இந்த பறக்கும் கார் சுமார் 1,000 கி.மீ. தொலைவு, 8,500 அடி உயரத்தில் பறக்கும் என்று  கூறியுள்ளார். இந்த பறக்கும் காரில் பிஎம்டபிள்யூவின் வழக்கமான என்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது பெட்ரோல்-பம்ப் மூலமாக இயங்குகிறது.  இதை காராக நாம் பயன்படுத்தியதை தொடர்ந்து விமானமாக மாற்றம் செய்வதற்கு 2 நிமிடங்கள் 15 வினாடிகளே தேவைப்படும். காரிலிருந்து விமானமாக அதன் இறக்கைகளுடன் மாறும் விதத்தில் வடிவமைத்துள்ளனர்.

இந்த விமானம் சுமார் 170 கி.மீ. வேகத்தில் காற்றில் பறந்துள்ளது. இந்த விமானத்தை சர்வதேச விமான நிலையங்களான நைட்ரா மற்றும் ஸ்லோவேகியாவில் உள்ள பிராடிஸ்லாவா ஆகியவற்றிற்கு இடையில் இயக்கியுள்ளனர். இந்த விமானத்தில் 2 நபர்கள் பயணிக்க முடியும். மேலும் இதில் 200 எடை அளவு தாங்கும் விதத்தில் தயாரித்துள்ளனர்.  இந்த பறக்கும் காரை ஓடுபாதையின் உதவியோடு தான் தரையிறக்க முடியும்.

தற்போதுள்ள போக்குவரத்து நெருக்கடி சூழ்நிலையில் இதுபோன்ற வாகனம் நல்ல வரவேற்பை பெறக்கூடியதாக உள்ளது. இதனையடுத்து செவ்வாய்கிழமையன்று நடந்த தொழில் கூட்டத்தில் ஐரோப்பியாவில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மைக்கேல் கோல், இந்த பறக்கும் காரை குறித்து ‘இது எங்கள் எதிர்காலத்தின் ஒரு பகுதியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டார். இதுவரை இந்த ஏர்காரிற்கு அமெரிக்காவில் 40,000 ஆர்டர்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்