ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் காரணமாக 14 நாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்ள தடை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரக அரசு, கொரோனா பரவல் காரணமாக, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு தங்கள் நாட்டு மக்கள் செல்லத் தடை விதித்தும், இந்த நாடுகளில் இருந்து விமானச் சேவைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தேசிய அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 14 நாடுகளில் இருந்து விமானச் சேவைத் தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, லைபீரியா, நமீபியா, சியரா லியோன், காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, சாம்பியா, வியட்நாம், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தங்கள் நாட்டு மக்கள் செல்லத் தடை விதித்தும், இந்த நாடுகளில் இருந்து விமானச் சேவைக்கு தடை விதித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு ஜூலை 21-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையிலிருந்து, சரக்கு விமானப் போக்குவத்து, வர்த்தகரீதியான தனிப்பட்ட நபர்கள் பயணிக்கும் சிறிய விமானங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சேர்ந்த மக்கள் வெளிநாடு சென்று திரும்பும் போது கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அமீரக மக்கள் எந்த நாட்டிற்கு செல்கிறார்களோ அந்த நாட்டு அரசு கூறிய அனைத்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால், பாதிக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரக மக்கள் உரிய அனுமதி பெற்று, மீண்டும் சொந்த நாட்டுக்கு வந்து சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…