கொரோனா தொற்று எதிரொலி… ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை…

ஹாங்காங்கில் மீண்டும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 23 பேரில் மூன்றில் ஒரு பங்கு பேர், ஏர் இந்தியா விமானம் மூலமாக வந்தவர்கள் என்று ஹாங்காங் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஏர் இந்தியா விமானங்கள் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஹாங்காங் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானங்களுக்கும் ஹாங்காங்க் அரசு தடை விதித்து இருந்தது. இதேபோல் அண்மையில், கொரோனா வைரஸ் தொற்று பாதித்த பயணிள் வந்ததால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாய் விமான போக்குவரத்து ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025