ஏர் இந்தியா ,பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் மார்ச் மாதத்திற்குள் விற்பனை -நிர்மலா சீதாராமன்
தற்போது இந்திய பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி செல்கிறது. இதனையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், அவ்வப்போது சில இந்திய பொருளாதாரம் குறித்து சில தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், இதனை போக்குவதற்காக சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில், தற்போது நஷ்டத்திலிருக்கும், ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் பாரத் பெற்றோலியம் நிறுவனம் ஆகிய இரண்டையும் வரும் மார்ச் மாதத்திற்குள் விற்க முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்களை வாங்க பலர் ஆர்வம் காட்டி வருகிற நிலையில், இந்த நிறுவனம் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விற்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.